தலைக் கவசத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் செய்தித் தாளிலும், தொலைக் காட்சியிலும், வானொலியிலும் படித்திருப்போம்..., பார்த்திருப்போம்.., கேட்டிருப்போம். ஆனால் அதை முழுதுமாக உணர வைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ள விரும்புகிறேன்...
கடந்த ஞாயிறு அன்று என் கணவர் அடையாறிலிருந்து கிண்டி செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த பொழுது எதிர் திசையில் ஒரு மூன்று சக்கர மிதிவண்டி (மோட்டார் பொருத்திய) தவறான முறையில் வந்து விட்டது. அதன் மேல் மோதக் கூடாது என்ற எண்ணத்தில் சாலையின் ஓரமாக செல்வதற்கு முயற்சி செய்துள்ளார்கள் ... வண்டி கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில்
இடித்து பக்கத்திலுள்ள மின் கம்பத்தில் மோதி கீழே தூக்கி எறியப் பட்டுள்ளார்கள்.. கழுத்தின் இடதுப் பக்கத்திலுள்ள க்ளவிகல் எழும்பில் ( காலர் எழும்பு) முறிவு ஏற்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்யப் பட்டு இப்போது நன்றாக உள்ளார்கள்... ஒரு மாதம் ஒய்வு எடுக்குமாறு மருத்துவரின் ஆலோசனை.
எப்போதும் தலைக் கவசம் அணியும் பழக்கம் உள்ளத்தால் தலையில் எவ்வித அடியும் படவில்லை.. இல்லையென்றால் மிகப் பெரிய ஆபத்தாக இருந்திருக்கும். தலைக் கவசம் தான் அவர்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது..
இரு சக்கர வாகனம் ஓட்டுவர்கள் அனைவரும் சாவி எடுக்கும் போதே தவறாமல் தலைக் கவசத்தையும் சேர்ந்து எடுங்கள். மறக்காமல் தலைக் கவசத்தை பயன் படுத்துங்கள். இது எங்களின் அன்பான வேண்டுகோள்.....