நாம் கேட்கும், பார்க்கும், படிக்கும் பல செய்திகளை , அறிதல், சிந்தித்தல், புரிதல், தெளிதல் என்ற அடிப்படையில் பார்த்தோமானால் அதன் மூலம் கிடைக்கும் அனுபவம் இருக்கிறதே, அது மிகவும் வியக்கத்தக்கதாக இருக்கும்.! சாதாரணமான் கண்ணோட்டத்திற்கும், இதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் எளிதில் உணரலாம். எதையும் ஆராய்ந்து, அலசி தெளிதல் என்பது சிறந்த அறிவைக் கொடுக்கும். அந்த அனுபவம் எதற்கும் ஈடு இணையில்லாத ஒன்றாக இருக்கும் என்பதில் சிறிதும் அட்டியில்லை..! அனைத்து காரியத்தையும் பகுத்து ஆராயும் ஒரு பழக்கத்தை ஏற்படுத்தும். அது தானே பகுத்தறிவு..! நம்மில் பலர் பகுத்தறிவு என்பது நாத்திகம் சம்பந்தப் பட்டது என்று எண்ணுகின்றனர். எதையும் முழுமையாக அறிந்து, ஆராய்ந்து தெளிதல் தான் பகுத்தறிவு. இதனை அனுபவிக்கும் போது தான் இதன் பயன்பாடு நமக்கு தெரிய வரும்.. நிறைந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.இந்த கண்ணோட்டத்தை நாம் எல்லோரும் கடைப் பிடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இதனை கற்றுக் கொடுத்து விட்டோமானால் நம் எதிர்கால சமூகம் மிகச் சிறந்த மாற்றத்தை அடையும் என்பது நிதர்சனமான உண்மை.
Thursday, 25 June 2015
Monday, 22 June 2015
சமஸ்கிருதம் ஒரு முதலீடு
ஆதி காலத்தில் மனிதன் தான் நினைத்ததை , தன்னுடைய உணர்வை மற்றவர்களுக்கு புரிய வைக்க முதலில் சைகையை பயன்படுத்தினான். பின்பு ஒலி எழுப்பியதன் மூலம் மொழி உண்டாயிற்று என்பது தான் வரலாறு. பின்பு ஒரு இனம் அல்லது குழுவாக வாழ்ந்தவர்கள் அவர்களுடைய தாய் மொழியை பேசி தங்களுக்குள் கருத்தை பரிமாறிக் கொண்டார்கள்.
இரு தமிழர்கள் சந்தித்தால் தமிழிலும், இரு ஆங்கிலர்கள் சந்தித்தால் ஆங்கிலத்திலும், இரு ரஷ்யர்கள் சந்தித்தால் ரஷ்ய மொழியிலும் , இரு சீனர்கள் சந்தித்தால் சீன மொழியிலும் உரையாடுவார்கள். இது தானே இயல்பு..! ஆனால் ஆரியர்கள் தங்களின் மொழியாக, வேத மொழியாக கூறிக் கொள்ளும் சம்ஸ்கிருத மொழியை மட்டும் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதில்லையே..இதை நாம் சிந்தித்தோமா..! இரு பார்ப்பனர்கள் சந்தித்துக் கொண்டால் சமஸ்கிருதத்தில் தானே பேசிக் கொள்ள வேண்டும்.ஆனால் அவர்கள் வாழும் மாநில மொழியிலும், ஆங்கிலத்திலும் தானே பேசிக் கொள்கிறார்கள். அப்படி இருக்கையில் அது எப்படி மொழியாக இருக்க முடியும்.? அவர்களின் தொழிலுக்கு போடப் படும் முதலீடு தான் இந்த சமஸ்கிருதம் என்பது தானே சரியாக இருக்க முடியும்..! உடலுழைப்பு இல்லாமல் மந்திரம் சொல்லி அதன் மூலம் சம்பாதித்து வாழ்கிறார்கள் எனும் பொழுது , அந்த மொழி அவர்கள் வாழ்வாதரத்திற்கு பயன் படும் ஒரு முதலீடு என்பது தான் உண்மை.! நாம் அதை செத்த மொழி என்று சொல்வது கூட சரியல்ல என்பது என் கருத்து.
இந்த புரியாத ஒரு மொழியை சொல்லி, நம்மவர்களை சிந்திக்க விடாமல் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.! மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவன் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களில் எல்லாம் ஒரு நிகழ்ச்சியை வலுக்கட்டாயமாக புகுத்தி , சடங்கு, சம்பிரதாயம் என்று கூறி அவர்களுக்கே புரியாத மொழியில் பேசி, ஒரு மணிநேரம், இரண்டு மணி நேரம் பயபக்தியுடன் உட்கார வைத்து , அதன் மூலம் பணம் சம்பாதிக்க தான் இந்த சமஸ்கிருதம் பயன் படுகிறது.இதில் மிகவும் வருத்ததுக்குரிய செய்தி என்னவென்றால் , அவர்கள் நம்மிடம் சொல்லும் மந்திரங்கள் எல்லாமே நம்மை இழிவுப் படுத்துவதும், நம்ப முடியாத நம் அறிவுக்கு ஓவ்வாத கதைகளாகவும் இருப்பது தான்..!
Friday, 12 June 2015
ஜூன் . 12 . குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்..!
ஜூன் . 12 . குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்..!
நேற்று அமைந்தகரை பகுதி வழியாக வரும் போது ஒரு தேநீர் கடையில் 10 வயதுடைய ஒரு சிறுவன் ஓடி ஓடி வேலை செய்துக் கொண்டிருந்தான். தேநீர் குவளையை வாடிக்கையாளர்களிடம் சென்று கொடுப்பதும், அவர்கள் குடித்தப் பின்பு அக்குவளையை கழுவி வைப்பதும் , அவர்கள் கொடுக்கும் பணத்தை தன முதலாளியிடம் கொடுத்து விட்டு , அவரின் ஏவலுக்காக அவரின் முகத்தைப் பார்த்தப்படி நிற்கிறான்...! அவனுக்கு தெரியுமா என்று தெரியவில்லை..தன்னைப் பற்றி தான் இன்று இந்த உலகதிலுள்ள அனைத்து ஊடகங்களும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன என்பது..!
குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப் பட வேண்டும் பல ஆண்டுக்களாக பேசப் பட்டு வருகிறது. சட்டம் இயற்ற சட்டத் துறை உள்ளது. நீதி வழங்க நீதித துறை உள்ளது. இதை தடுக்க காவல் துறை உள்ளது.இதைப் பற்றி மேடைகளில் முழங்க அரசியல்வாதிகள் உள்ளனர்..! உண்மையில் இது ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். சமூக ஆர்வாளர்கள் முயற்சி செய்கிறார்கள்..ஆனால் இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது..!
Subscribe to:
Posts (Atom)