பிறப்பு சான்றிதழ்களில் தந்தையின் பெயரை சேர்ப்பது இனி கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.! இதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.!
' திருமண உறவைத் தாண்டியும், சிலர் குழந்தை பெற்றெடுக்கின்றனர். அல்லது சில பெண்கள் தங்கள் மட்டுமே குழந்தை வளர்க்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரு தாய் இல்லாமல் குழந்தை பிறக்க முடியாது .அதனால் தாயின் அடையாளம் கண்டிப்பாக தெரியும். சில நேரங்களில் தந்தையின் அடையாளம் தெரியாமல் போகலாம். அல்லது அவருடைய பெயரை தாய் சேர்க்க விரும்பாமல் இருக்கலாம். மாறி வரும் கால சூழலுக்கு ஏற்ப சட்டங்களிலும் மாற்றங்கள் தேவை. நாட்டில் பிறக்கும் ஒவ்வொருவரின் பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும். எந்தக் காரணத்தையும் முன்னிட்டு பதிவு செய்யாமல் இருக்கக் கூடாது.ஆதலால் தந்தையின் பெயர் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தக்கூடாது. இதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும்.' என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
#மாறி#வரும்#காலசூழலுக்கு#ஏற்ப#சட்டங்களிலும்#மாற்றங்கள்#தேவை.