கடந்த சனிக்கிழமையன்று நான் பேருந்தில் வந்துக் கொண்டிருந்தபோது , சென்னை மைலாப்பூர், திருவள்ளுவர் சிலையிலிருந்து லஸ் கார்னர் வருவதற்கு 45 நிமிடங்கள் ஆனது. 5 நிமிடத்தில் கடக்க வேண்டிய சாலையை 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதற்கான காரணம், அன்று பிரதோசமாம்...கபாலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜையாம்.. மேலும் நவராத்திரிக்காக, சாலையோர கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனை. இதற்கு தான் அந்த மக்கள் கூட்டம்.!
வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. பேருந்தின் உள்ளே குழந்தைகள் அழ ஆரம்பித்துவிட்டன. வயதானவர்கள் வியர்வையில் அவதிப் படுகின்றனர். இதில் பேருந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றிருப்பதால் கொசு தொல்லை வேறு..! காவல்துறையினர் நெடுநேரம் போராடி பின்பு தான் சாலை போக்குவரத்தை சரி செய்ய முடிந்தது...பக்தி என்பது மற்றவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்(து)த மதம் சார்ந்த ஒரு பண்டிகையின் காரணமாக எவ்வளவு பொது மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை மாநகராட்சி கவனத்தில் கொள்ளாதது மிகவும் கண்டனத்துக்குரியது.