ஜனவரி 26, 1950, இந்தியா சுதந்திர நாடு. இனி எந்த நாட்டுக்கும் கட்டுப்பட்டதல்ல என்பதை பிரகடனப் படுத்திய நாள். இன்றுடன் 66 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இத்தனை ஆண்டுகள் ஆனப் பிறகு நாம் சாதித்தது என்ன என்று சிந்தித்துப் பார்த்தால், அணு ஆராய்ச்சியில் முன்னேறி இருக்கிறோம்... விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறி இருக்கிறோம்... கல்வியில் முன்னேறி இருக்கிறோம்... தொழிற்புரட்சியிலும் முன்னேறி இருக்கிறோம் என்பது உண்மை தான்.. ஆனால்,
இந்த அத்தனை முன்னேற்றங்களும் இந்நாட்டின் கடைகோடி மனிதன் வரை சென்று இருக்கிறதா என்றால் இல்லை என்பது தானே நிதர்சனமான உண்மை.!
இன்றும் ஜாதி, மத கலவரங்கள், அதன் மூல்ம் கொலைகள், தற்கொலைகள் என நடந்துக் கொண்டிருக்கின்றன என்பது தானே உண்மை.!
தாழ்த்தப்பட்ட மக்கள் என பிரிக்கப்பட்ட சமூகத்தில் இன்னும் கல்வி மறுக்கப்பட்டு, சம உரிமை மறுக்கப்பட்டு பொருளாதார ரீதியில் பின் தங்கி தானே உள்ளார்கள் எனபது தானே உண்மை.!
இன்னமும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் ஒரு வேளை உணவிற்கே
தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் எனபது தானே உண்மை.!
பெண்கள் இன்னமும் பாலியல் ரீதியாக பல வன்கொடுமைகளை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பெண்களுக்கான 33 விழுக்காடு கூட இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. சம உரிமை என்பது எல்லா பெண்களுக்கும் கிடைக்கவில்லை என்பது தானே உண்மை.!
தரமான கல்வி எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைப்பது என்பது எட்டாக்கனியாக தானே இன்னமும் உள்ளது.!
மத சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொண்டு மதவாதத்தை தூண்டிக் கொண்டு தானே இருக்கிறது.!
ஜாதியின் கொடூர பார்வையிலிருந்து மக்கள் இன்னமும் விடப்பட்ட முடியவில்லை என்பது தானே உண்மை.!
இவைகளை எல்லாம் சரி செய்து விட்டு, ' #அனைவருக்கும்அனைத்தும் ' என்ற தந்தை பெரியாரின் கொள்கைக்கேற்ப எந்த வித ஏற்றத்தாழ்வுகளும் இல்லாமல் அனைத்து மக்களும் #சமஉரிமையுடன் வாழ வழிவகை செய்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம், குடியரசு பெற்ற நாடு என்ற தகுதியை பெரும் #இந்தியா.!