Tuesday, 23 February 2016

மாணவர்களுக்கு எதிரான ஒடுக்கு முறை.


JNU மாணவர்களை எல்லா வகையிலும் ஒடுக்க வேண்டுமென்று திட்டம் தீட்டி செயல் படுகிறது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், சங் பரிவார் அமைப்புக்கள்.!
மாணவ போராட்டம் மிகப் பெரிய அளவில் வெடிக்கக் கூடும் என்ற அச்சமே இதற்கு காரணம்.!
சென்னை அய்.அய்.டி - யில் அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட போதும், ரோஹித் வேமுளா தற்கொலை தூண்டலின் போதும், டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.!
டெல்லி அய்.அய் .டி மாணவர்கள் அனைத்து அய்.அய்.டி. களிலும் அம்பேத்கர்,பெரியார் வாசகர் வட்டம் துவக்கப்படும் என்று அறிவித்து சில இடங்களிலும் தொடங்கினார்கள்.! பார்ப்பனீயத்தின் வேரை அசைக்க முற்படுவதால், RSS இந்த மாணவர்களை குறி வைக்கிறது...
ஏபிவிபி மாணவ அமைப்புக்கு(RSS) எதிராக செயல்படும், அதாவது பார்ப்பனீயத்திற்கு எதிராக செயல்படும் இந்த மாணவர்களை பழி வாங்க துடிக்கிறது இந்துத்துவா.!!!
ஆனால், இந்த அடக்குமுறை தான்,
மாபெரும் புரட்சிக்கு வழி வகுக்கப் போகிறது.!

Wednesday, 10 February 2016

திரைப்படங்கள் சொல்லும் உண்மைகள்

சமீபத்தில் இயக்குனர் பாரதி ராஜாவின் நிழல்கள் திரைப்படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.  சிறு வயதில் பார்த்திருந்தாலும், நன்கு புரிந்துக் கொள்ள இப்போது தான் முடிந்தது. படத்தின் கரு,  வேலையில்லா திண்டாட்டம், காதலுக்கு பெற்றோர் மறுப்பு,பிள்ளைகள் விரும்பும் துறையை தேர்ந்தெடுக்க உரிமையில்லை... அதிக மதிப்பெண்கள் எடுத்து அவர்களுக்கு விருப்பமில்லாப் பணியில் சேர வேண்டும் என்ற பெற்றோர்களின்  திணிப்பு, திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை  என பல கருத்துகளைச்  சொல்லும் திரைப்படம்.!

இந்த திரைப்படம் வந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். ஆனால் இன்றுவரை இந்த சமூக அவலங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. முன்னேற்றம் என்பது நம் தமிழ்ச் சமூகத்தில் இன்னும் கூட வரவில்லை என்ற அச்சத்தை தான் நமக்கு  ஏற்படுத்துகிறது.! 

காலத்திற்கேற்றவாறு நல்ல கருத்துகளை சொல்லும் திரைப்படங்கள் வரத் தான் செய்கின்றன. உள் வாங்கும் திறன் நம் மக்களிடம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை  வருத்தத்துடன் ஒத்துக் கொள்ள தான் வேண்டும்.

நுகர்வு கலாச்சாரம்

இந்த நுகர்வு கலாச்சாரம் உண்மையில் பெண்களையும், குழந்தைகளையும் ஒரு பொய்யான,மூட நம்பிக்கையுடன் கூடிய  மாய உலகிற்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.!

தன்னை பொருளாதார ரீதியில் நிலை நிறுத்தி கொண்டப்  பிறகு திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கையுடன் சொல்வதற்கு  கூட  நம் பெண்களுக்கு சிவப்பழகு தேவைப் படுகிறது.!

என் மகன் நன்குப் படித்து பெரிய ஆளாக வருவான் என்ற நம்பிக்கையை கொடுக்கக் கூட ஒரு தாய்க்கு  ஊட்டச்சத்துப் பானம் தேவைப்படுகிறது..!

இந்த மாதிரி நுகர்வு கலாச்சாரத்திற்கு தீனிப் போடும் விளம்பரதாரர்கள் மக்களின் அறியாமையை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்...!