இன்று ஒரு மருத்துவமனையில் எங்கள் நேரம் வரும்வரை காத்திருந்த சமயத்தில், வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்களை கவனித்து போது ஓன்று மட்டும் மிக நன்றாக புரிந்தது. ஏதோ ஒரு வகையில் மதத்தை அவர்கள் பிரதிபலித்தார்கள்... ஒரு சில பெண்கள் பர்தா அணிந்திருந்தார்கள்... ஒரு சிலர் திருநீறு, குங்குமம், சந்தனம், தலை வகிடில் கூட குங்குமம் வைத்திருந்தார்கள்... கனமான தாலி சரடு, மெட்டி என தங்களின் பொருளாதார ஏற்றத்தையும் காட்டும் விதமாக வந்திருந்தார்கள்... இன்னும் ஒரு சிலர் மெலிதான சங்கிலி, ஆனால் அதில் சிலுவை டாலர் அணிந்திருந்தனர்.!
அவர்களுடன் வந்த ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரி தான் இருந்தார்கள்...யாரையும் இவர்கள் இந்த மதத்தை சார்ந்தவர்கள் என சொல்ல முடியாத வகையில் இருந்தனர்.!
அனைத்து மதங்களும் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்துகின்றன.., தங்களின் மதத்தை அவர்கள் மீது திணித்து, அவர்களுக்கு தெரியாமலேயே, அவர்களை மென்மேலும் அடிமைப் படுத்துகின்றன.!
பெண்கள் மட்டும் மதத்தை துறந்தால், மதம் மட்டுமல்ல... பெண்ணடிமைத்தனமும் அறவே ஒழிந்து விடும் என்பது மிக உறுதி.!