24-7-2016 , அன்று விஜய் தொலைக்காட்சியின் நீயா, நானா நிகழ்ச்சியில் ஒரு சிறந்த கருத்து பதிவு செய்யப் பட்டது. ஆண்கள் மன அழுத்தத்திற்கான காரணம் பெரும்பாலும் பெண்களின் தற்போதைய நடவடிக்கைகள் என்பது போல் ஒரு பகுதியினர் (பெண்கள் தான்..) பேசினர்... மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள் ஆண்கள் என்று சொன்ன பெண்கள் கருத்தில் பல உண்மைகள் பதிவு செய்யப் பட்டது... நிகழ்ச்சியின் இறுதியில் இயக்குனர் ராம் அவர்கள் சொன்ன கருத்து மிக அருமை..!
என்னவென்றால் ஆண்களின் மன அழுத்தம் என்பது பெண் விடுதலையை சரியாக புரிந்து கொள்ளாமை தான் என்பதை மிகச் சரியாக கூறினார்... பணிச் சுமை, வீட்டு பொறுப்புகள், அனைத்தையும் தாண்டி ஆண்களின் மன அழுத்தம் தன மனைவியின் முன்னேற்றம், நிர்வாகம்,முடிவெடுக்கும் திறன், அறிவு இவைகளை ஏற்றுக் கொள்ளாததின் விளைவு தான்...தன மனைவி படித்திருக்க வேண்டும் என்பதையும் தாண்டி பணியில் இருக்க வேண்டும்... தன்னுடைய பொருளாதார சிக்கலுக்கு துணை நின்று பங்கெடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண் பிள்ளைகள், பெண்களின் விடுதலையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.... அவர்களின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதற்கு பதில் பொறாமை கொள்கிறார்கள்..தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்க கொண்டு மனா அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். என்பது தான் முற்றிலும் உண்மை.!
பெண் விடுதலை என்பது என்ன... பாலியியல் சமத்துவம் என்றால் என்ன என்பதை புரிந்துக் கொண்டால் மட்டுமே அவர்களால் இதனை எளிதாக கையாள முடியும்... இதற்கு அம்மாக்களின் பங்கு மிக முக்கியமானது...இளம் வயதிலேயே பெண்ணியம் சார்ந்த அறிவை ஊட்டவேண்டும்... நம்சமூகத்தில் பெண்களே பெண்களுக்கு தடையாய் இருக்கிறார்கள் என்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்... :-( ஒரு மருமகளின் வளர்ச்சியில் எந்த மாமியாருக்கும் அக்கறை இருப்பதாய் தெரியவில்லை.இந்நிலை மாற வேண்டும். வளரும் அடுத்த தலைமுறையினர் பெண்கள் வளர்ச்சியை, முன்னேற்றத்தை ஏற்று, உறுதுணையாய் இருக்க வேண்டிய புரிதலை பெண்கள் தான் தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு உணர வைக்கவேண்டும்.!
" ஆண்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்றால், பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து விடுங்கள்."
#தந்தைபெரியார்.
என்ன அருமையாக, சிந்தித்து சொல்லி இருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்...இதனை ஆண் பிள்ளைகளை வளர்க்கும் பெண்கள் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.!
பெண்கள் முன்னேற்றத்தை மட்டும் பாருங்கள்.. அதில் கலாச்சாரம், பண்பாடு எதையும் பார்க்காதீர்கள் என்று சொன்ன இயக்குனர் ராம் அவர்களுக்கு நன்றி.!