அக்டோபர் - 31, இன்று உலக சேமிப்பு நாளாம்... சேமிக்கும் பழக்கம் இப்போது நம்மில் பலரிடையே இல்லை என்பது தான் உண்மை... கடனில் பொருட்களை வாங்கி சேமிக்கும் முறையை தான் பலர் சேமிப்பாக கருதுகிறார்கள். மாதம் நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பினால், ஐந்து இலக்கத்தில் சம்பாதிப்பவர்களும் சரி, ஆறு இலக்கத்தில் சம்பாதிப்பவர்களும் சரி.. சேமிப்பு என்பது இல்லை என்றே பலரின் பதிலாக இருக்கிறது.!
தேவைக்கு பொருட்களை வாங்கும் பழக்கம் போய் இப்போது, ஆசைக்காகவும், பகட்டு கௌரவத்திற்காகவும் பொருட்களை வாங்கிக் குவிகிறார்கள் மக்கள். அலைப்பேசியிலிருந்து, கார் வரை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நான் இந்தப் பொருளையும் பயன்படுத்துவதில்லை என்று பெருமை பேசும் மக்கள் தான் நம்மிடையே பெருகிக் கொண்டு இருக்கிறார்கள். சம்பாதிப்பதை செலவு செய்துக்கொண்டே இருந்தால், அப்புறம் எப்படி சேமிக்க முடியும் ..?
நம்மைப் பார்த்து வளரும் நம் குழந்தைகளும் அப்படித் தானே இருப்பார்கள்.!
அவசரமாக நமக்கு ஒரு செலவு வந்து விட்டால் கூட மற்றவரை எதிர்பார்க்கும் நிலைமை மிகவும் மோசமான ஓன்று... அப்படி எதிர்பார்த்தும் கிடைக்கவில்லை என்றால் அது அதை விட மோசமான நிலைமையை உருவாக்கி விடும்.!
நம்முடைய வருமானத்தில், ஒரு பங்கு சேமிப்பு என்று எடுத்து வைக்கும் பழக்கம் இன்றியமையாத ஓன்று... நமக்கும் சமயத்தில் பயன்படும். மேலும் , நம் நண்பர்கள், உறவினர்கள் என மற்றவர்கள் சிரமப்படும் போது நம்மால் கொடுத்து உதவ முடியும்.!
நம்மால் முடிந்தமட்டும் சேமிக்கும் பழக்கத்தை மீண்டும் முறைப் படுத்திடுவோம். வளமான வாழ்க்கைக்கு வித்திடுவோம். பணத்தை கையாளும் முறையில் சேமிப்பு முக்கிய பங்காற்றுகிறது. Money management பற்றிய தெளிவை நம் பிள்ளைகளுக்கும் கற்றுத் தருவது மிக முக்கியமான வாழ்வியல் ஆகும்.!