இவ்வளவு அவசரகதியில் அதிமுக-வின் ஊழல்களை தோண்டி எடுக்கும் பா.ஜ.க. , தங்களின் வியாபம் பற்றியோ, அமித்ஷாவின் 500 கோடி, பாபா ராம்தேவிற்கு நிலங்களாகவும், கோடிக்கணக்கில் பணத்தையும் வாரி வழங்கியதைப் பற்றியோ, சுத்தப் படுத்தவே முடியாத கங்கைக்கு ஒதுக்கிய நிதி பற்றியோ, இன்னும் எவ்வளோவோ இருக்கிறது.. சொல்லிக் கொண்டே போகலாம்... அதை பற்றியெல்லாம் ஒரு பேச்சுக்கு கூட மூச்சு விடவில்லையே...!
தன கட்சி ஆளும் மஹாராஷ்டிராவிலோ, ராஜஸ்தானிலோ, அரியானாவிலோ, மத்தியபிரேசத்திலோ உள்ள தலைமை செயலாளர் வீட்டில் இம்மாதிரி துணை ராணுவத்துடன் நுழைந்து ரெய்டு செய்யும் துணிவு உண்டா... கட்சி தலைமைக்கு ...?
நான் ஏதோ ஊழலுக்கு ஆதரவாக, அதிமுகவிற்கு பேசுவதாக நினைக்க வேண்டாம்... ஊழல் தடுக்கப்பட வேண்டும்... ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. பெரியரியலை படித்தவர்களுக்கு கட்சி பேதமின்றி, சமூகம் பற்றிய கண்ணோட்டம் மட்டுமே இருக்கும்.
'ஒட்டு அரசியல் செய்பவர்களுக்கு அடுத்த தேர்தலைப் பற்றிய கவலை, நமக்கோ அடுத்த தலைமுறைப் பற்றிய கவலை .'
என்று அய்யா அவர்கள் சொன்னது போல் எங்களுக்கு அடுத்த தலைமுறை பற்றிய கவலை தான்.!
ஊழலை காரணம் காட்டி, தமிழ்நாட்டில் தங்களுக்கு ஒரு நிரந்தரமான இடத்தை பெற முயற்சி செய்கிறது பா.ஜ.க.!
மத்தியில் ஆட்சியை பிடித்ததும் இதே முறையில் தான் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. ஊழலா, மதவாதமா, என்றால் மக்களின் கவனம் ஊழலின் மேல் தான் திரும்பும்... அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. தங்கள் கட்சி ஊழலில்லா கட்சி என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டே ஊழலை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. .. தாங்களே உரிய மதவாத அரசியலுடன்...!