Saturday, 29 February 2020



சிறகு மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை. சிறகிற்கு மிக்க நன்றி.

Saturday, 22 February 2020

சிறகு மின்னிதழில் வெளிவந்திருக்கும் எனது கட்டுரை. சிறகிற்கு மிக்க நன்றி ...

http://siragu.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf/

Tuesday, 4 February 2020

ஓராண்டு காலமாக எவ்வளவு மனஉளைச்சல். இந்த குழந்தைகளுக்கு பொதுத்  தேர்வா என்று மனதில் புழுங்கி, பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பி, எழுதி, அப்படியும் ஆற்றாமையால் பல இரவுகள் தூங்காமல் விழித்திருந்து, பல தலைவர்கள், மாணவர்கள், பொது மக்கள், ஏன் குழந்தைகள் கூட  என அனைவரும் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடி, இறுதியில் இப்போது 5&8 வகுப்பிற்கு பொதுத்தேர்வு ரத்து என்ற அறிக்கை வந்துள்ளது. ஒருவாறு இன்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மனதிற்கு மிகவும்  மகிழ்ச்சியாக இருக்கிறது. 
இயல்பாக தானே போய்  கொண்டிருக்கிறது ... ஆனால், இதெல்லாம் எதற்காக என்று சிந்தித்தோமானால்,  நம்மை ஒருவித பதட்டத்திலேயே வைத்திருக்கும் ஒரு யுக்தி தான். அது மத்தியில் ஆளும் பாஜக அரசும் சரி,  அவர்களின் ஆணைகளுக்கிணங்க இங்கே மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும் சரி, அவர்கள் செய்யும் தவறுகளை நாம் கவனிக்கக்கூடாது என்பதற்காக நம்மை ஒரு போராட்ட மனநிலையிலேயே வைத்திருக்க, இதுபோல் அவ்வப்போது சில விஷயங்களை செய்கிறார்கள். அதோடு மட்டுமல்ல.. அவர்கள் இதுபோல் செய்யும் அனைத்து விசயங்களும் அவர்களின் (ஆர்.எஸ்.எஸ்.) அஜெண்டாவில் உள்ளவையே! 
தேசிய கல்விக்கொள்கையில் 3ஆம் வகுப்பிற்கு கூட பொதுத்தேர்வு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதனை கூட, ரத்து பண்ணிவிட்டார்கள் என்று நாம் மகிழ்ச்சியடைந்து அலட்சியமாக விட்டுவிட்டோமானால் , பின்னாலேயே இதைவிட பெரிதாக வேறு  எதாவது செய்ய போகிறார்கள் என்று தான் பொருள்!



மேலும் இது தேர்தலுக்கான முன் ஏற்பாடாக கூட இருக்கலாம். நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  எப்படியோ, இந்த ஆண்டு குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதவேண்டிய கொடுமை இல்லை என்பதில் மிக்கமகிழ்ச்சி!